இத நான் சொல்லலீங்கோ, என் பிரெண்ட் சொல்றாருங்கோ. அவர் அடுத்ததா சொன்னது தான் ரொம்ப காமிடி !
"விஜய் அன்டனி மாதிரி ரகுமானுக்கு இசை அமைக்கத் தெரியலை. என் உச்சி மண்டையிலே சுர்ருங்குது பாட்டு மாதிரி ஒரு பாட்டு போடமுடியுமா?"

ரகுமான் அவர்கள் மிகவும் சிரமப்பட்டு தமிழ் திரையிசையை உலகத்தரத்துக்கும் ஒரு படி மேலே கொண்டு செல்ல முயற்சி செய்கிறார்.
இங்க என்னடா என்றால் ஒரே மாதிரியான குத்துப் பாட்டுத் தான் வேண்டும் என்று சொல்லும் கூட்டம் இன்னும் இருந்துக் கொண்டுத்தானிருக்கிறது.

"உசிரே போகுதே" பாடல் மயக்கத்திலிருந்து இன்னும் வெளிவர முடியாமல் நான் தவித்துக் கொண்டிருக்கிறேன்.
"வீரா" பாடலின் புதுமையான இசைக் கோர்வை என்னை இழுத்து வைத்துக்கொண்டிருக்கிறது.
"கள்வரே" பாடல் என்னைக் கட்டிப் போட்டு வைத்திருக்கிறது.
"கோடு போட்டா " வீரம் ததும்பும் பாடலுக்கு ஒரு எடுத்துக் காட்டு.
"காட்டுச்சிறுக்கி" பாடலும், "கெடாக் கறி" பாடலும் இதுவரை வெளிவராத நாட்டுப் புற மெட்டு .

பாடல்களின் பின்னணியில் ஒலிக்கும் மென்மையான இசைக்கருவிகளின் ஒலிகளும் துல்லியமாக கேட்கும் வண்ணம் ஒலித்து நெஞ்சை வருடுகின்றன.
பாடலின் இடையிடையே வரும் இசையிலும் மிகுந்த கவனம் செலுத்தியிருக்கிறார் திரு ரகுமான் அவர்கள்.

பாடல்களை பல நூறு தடவை கேட்டு விட்டேன் . கேட்க கேட்க உள்ளே மறைந்திருக்கும் பல முத்துக்களையும் வைரங்களையும் புதிதாக கண்டு பிடித்துக் கொண்டிருக்கிறேன்.

Well done Rahman sir!

A.R. ரகுமான் அவர்களின் 44 - வது பிறந்த நாள் ( 06. 01. 2009 ) அன்று அவருடைய இல்லத்தில் அடியேனால் எடுக்கப் பட்ட படங்கள்.

அன்பு நெஞ்சங்கள் அளித்த கேக் ஒன்றை ரகுமான் அவர்கள் புன்னகையோடு வெட்டுகிறார்.(மேலே உள்ள படம்)

கொஞ்சம் கூட பந்தா இல்லாமல் எல்லோருடனும் அவர் பழகிய விதமும், பேசிய விதமும் என்னை வியப்படைய செய்தது.

திரு ரகுமானோடு அவர் பிறந்த நாளன்று இருந்த அந்த பதினைந்து நிமிடங்கள் என் வாழ்க்கையின் உன்னதமான நிமிடங்கள்.

கோல்டன் க்ளோப் விருது வாகைச் சூடி தாயகம் திரும்பிய போது A.R. ரகுமான் அவர்களுடைய இல்லத்தில் 14.01.2009 அன்று இரவு 1.30 மணிக்கு அடியேனால் எடுக்கப்பட்ட படங்களில் சில:ஏராளமான ரசிகர் கூட்டத்தோடு நானும் ஒருவனாய் நள்ளிரவு வரை காத்திருந்து
அவருக்கு வாழ்த்து தெரிவித்த தருணத்தை என்னால் என்றென்றும் மறக்க முடியாது.

"எதிர் காலத்தில் இந்தியர்களாகிய நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து தனித்துவம் மிகுந்த இசைவடிவம் ஒன்றை உருவாக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

இப்பொழுது மிகவும் எளிதாக ஹிப்பாப் பாணியில் இசையமைத்து விடலாம். ஆனால் அப்படி செய்துக்கொண்டிருந்தால் நமக்கென்று ஒரு பாணியை உருவாக்க முடியாமல் போய்விடும் என்று நினைக்கிறேன்

நாம் எல்லோரும் இப்பொழுது புதிய தொழில் நுட்பத்திற்கு மாறிவிட்டோம். மேலும் இசையில் புகுத்தப்படவேண்டிய தொழில் நுட்பத்தைப் பற்றியும்,புதுமையைப் பற்றியும்,இளமைத்தனம் பற்றியும் நாம் நன்கு தெரிந்து வைத்திருக்கிறோம்.

இந்த தருணத்தில் தனித்துவத்தை நோக்கி நம் எண்ணங்கள் ஒன்று படுமானால் நம்முடைய இசை அகில உலகையே ஆளும் இசையாக மாறிவிடும்.நாம் எல்லோரும் நம் மனங்களை ஒன்றுபட செய்தோமானால் இதை நாம் நிச்சயமாக சாதித்துவிட முடியும்."

-பண்பலை வானொலி 'ரேடியோ சிடி' பேட்டியில் ஏ .ஆர் .ரஹ்மான் சொன்னது.

என் ஆதங்கம்:

இனிமேலாவது நம்முடைய தமிழ், தெலுங்கு, மலையாள, இந்தி இசையமைப்பாளர்கள் காப்பியடிக்காமல் சொந்தமாக இசையமைத்து ஒரு தனித்தன்மையை உருவாக்க முன்வருவார்களா?

ஏ.ஆர்.ரஹ்மான் இந்த கேள்விக்கு என்ன பதில் சொல்கிறார்?

ரேடியோ சிடி பண்பலை வானொலிக்கு அவர் அளித்த பேட்டியின் ஒரு பகுதி:
"ஒரு இசையமைப்பாளர் வெறும் இசைஅமைப்பாளராக மட்டும் இருந்துவிட முடியாது. அவர் தொழில் நுட்பத்தையும் தெரிந்துக் கொள்ளவேண்டியது அவசியம்.

டைப் ரைட்டர் வச்சிட்டிருந்தவங்க எல்லாம் இப்போ கம்ப்யூட்டர் வாங்கிட்டாங்க. தேவைகள் மாறிவிடுகின்றன. நாம இப்போ என்ன டைப் பண்ரோமோ அது தான் கம்ப்யூட்டருக்கு போகும். அதுவா டைப் பண்ணாது இல்லையா? இசையிலும் அதே மாதிரி தான்.
தானாகவே இசையை உருவாக்கற சாஃப்ட்வேர் இருக்குது. ஆனால் அது மெலோடியைத் தராது.

இது ஒரு வண்டி ஓட்ற மாதிரி தான். கார் ஓட்ற மாதிரி தான் . நாம என்ன செய்ய வேணும்னா, அது நம்பள டிக்டேட் பண்ணாம , நாம அத டிக்டேட் பண்றாமாதிரி வச்சிக்கணும். இப்ப ம்யூசிக் சாஃப்ட்வேர் வர்ற லிமிடேஷனோட நாம ம்யூசிக் பண்ணனும்னா அது லிமிடடா தான் இருக்கும் . அதனால அத நாம தான் மாத்தியாகணும். "

நல்லா சொன்னீங்க ரஹ்மான் 'நச்'சின்னு.

ஒரிஜினல் பாட்ட ஓடவிட்டு , நடு நடுவுல அடி தொண்டைல ஆய் வூய்னு கத்தி, கூச்சல் போட்டு ,பாட்டோட மூடுக்கு சம்பந்தமில்லாம ட்ரம்ஸ் பீட் குடுத்து இசையைக் கெடுக்கறது தான் ரீமிக்ஸ் னு நெனச்சிட்டிருக்கிற இசையமைப்பாளர்கள் மேல உங்களுக்கு கோவம் கோவமா வருதா?
அது நியாயம் தானுங்களே!
இப்போ இது உங்க சான்ஸ்.
நீங்களே ஒரு பாட்டுக்கு ரீமிக்ஸ் பண்ண ஒரு வாய்ப்பு இதோ !

ஏ. ஆர். ரஹ்மானோட இசையில விரைவில் வரப்போகும் இந்தி படம் தான் 'அதா'.
'நோக்கியா' நிறுவனம் இந்த படத்திலிருந்து இரண்டு பாடல்களின் வாய்ஸ் டிராக் மட்டும் ரீமிக்ஸ் செய்வதற்காக வெளியிட்டிருக்கிறது.
சொடுக்குக:http://www.remixrahmansada.com/contest.aspx
முதல் பாடல் : குல்பிஷா
இரண்டாம் பாடல்: கும்சும் கும்சும்
யார் வேண்டுமானாலும் போட்டியில் கலந்துக்கலாம்.
செல் போனிலோ அல்லது கீ போர்டிலோ ரீமிக்ஸ் செய்து அவர்களுக்கு அனுப்பி வைக்கலாம்.
போட்டியின் வெற்றியாளர் ஒரு நாள் முழுவதும் ரஹ்மான் அவர்களுடன் அவருடைய ஸ்டுடியோவில் ஒரு பாடலை ரீமிக்ஸ் செய்யலாம்.
மேலும் பத்து பேர்கள் தேர்வு செய்யப்பட்டு ரீமிக்ஸ் பாடலுக்கான இசை
வீடியோவில் ரஹ்மானோட பங்கு பெற வாய்ப்பளிக்கப்படும்.
ரெண்டு பாடலையும் நெறைய தடவை கேட்டுட்டேன் . கேக்க கேக்க ரொம்ப நல்லா இருக்கு. எனக்கு ரொம்ப பிடிச்ச பாட்டு :கும்சும் கும்சும் .
நீங்க பாட்ட ' டவுன்லோட்' பண்ணிட்டீங்களா ?
போட்டியில் கலந்துக்க கடைசி நாள் :31.05.08

ஏ. ஆர். ரஹ்மானோட ரசிகர் ஒருத்தர் அவரைப் பாக்க வீட்டுக்குப் போனாருங்க. வேலை பளு அதிகம் இருந்ததால ரஹ்மானால அந்த ரசிகர அன்னைக்கு சந்திக்க முடியலைங்க.
அதனால "நீங்க நாளைக்கு வாங்க சந்திக்கலாம் "னு சொல்லியிருக்காருங்க.
அந்த ரசிகர பாத்து " நீங்க அசைவமா சைவமா "னு ரஹ்மான் கேட்டிருக்காருங்க.
அதுக்கு அந்த ரசிகரும் "நான் சைவம் தான்"னு சொல்லியிருக்காருங்க .
மறுநாள் ரஹ்மான் வீட்டுக்கு போன ரசிகருக்கு நேரம் ஒதுக்கி அவர சந்திச்சிருக்காருங்க
அந்த ரசிகருக்கு மேலும் இன்ப அதிர்ச்சி .
ரஹ்மான் அந்த ரசிகர சாப்பிட்டுட்டு போகச் சொல்லியிருக்காருங்க .
அங்க போனா மேலும் மேலும் இன்ப அதிர்ச்சி.
எல்லோருக்கும் அசைவ உணவு. இவருக்கு மட்டும் சைவ உணவு . அந்த ரசிகர் பேரு பிரபு கிருஷ்ணமூர்த்தி . http://prabhukrish.net/
இந்த நிகழ்ச்சியை சில நாளைக்கு முன்னால எனக்கு ஒருத்தர் சொன்னாருங்க.

இந்த விஷயம் இப்போ Times of India , பெங்களூரு பதிப்புல வந்திருக்குதுங்க .தேதி :03.05.08

Older Posts