இத நான் சொல்லலீங்கோ, என் பிரெண்ட் சொல்றாருங்கோ. அவர் அடுத்ததா சொன்னது தான் ரொம்ப காமிடி !
"விஜய் அன்டனி மாதிரி ரகுமானுக்கு இசை அமைக்கத் தெரியலை. என் உச்சி மண்டையிலே சுர்ருங்குது பாட்டு மாதிரி ஒரு பாட்டு போடமுடியுமா?"

ரகுமான் அவர்கள் மிகவும் சிரமப்பட்டு தமிழ் திரையிசையை உலகத்தரத்துக்கும் ஒரு படி மேலே கொண்டு செல்ல முயற்சி செய்கிறார்.
இங்க என்னடா என்றால் ஒரே மாதிரியான குத்துப் பாட்டுத் தான் வேண்டும் என்று சொல்லும் கூட்டம் இன்னும் இருந்துக் கொண்டுத்தானிருக்கிறது.

"உசிரே போகுதே" பாடல் மயக்கத்திலிருந்து இன்னும் வெளிவர முடியாமல் நான் தவித்துக் கொண்டிருக்கிறேன்.
"வீரா" பாடலின் புதுமையான இசைக் கோர்வை என்னை இழுத்து வைத்துக்கொண்டிருக்கிறது.
"கள்வரே" பாடல் என்னைக் கட்டிப் போட்டு வைத்திருக்கிறது.
"கோடு போட்டா " வீரம் ததும்பும் பாடலுக்கு ஒரு எடுத்துக் காட்டு.
"காட்டுச்சிறுக்கி" பாடலும், "கெடாக் கறி" பாடலும் இதுவரை வெளிவராத நாட்டுப் புற மெட்டு .

பாடல்களின் பின்னணியில் ஒலிக்கும் மென்மையான இசைக்கருவிகளின் ஒலிகளும் துல்லியமாக கேட்கும் வண்ணம் ஒலித்து நெஞ்சை வருடுகின்றன.
பாடலின் இடையிடையே வரும் இசையிலும் மிகுந்த கவனம் செலுத்தியிருக்கிறார் திரு ரகுமான் அவர்கள்.

பாடல்களை பல நூறு தடவை கேட்டு விட்டேன் . கேட்க கேட்க உள்ளே மறைந்திருக்கும் பல முத்துக்களையும் வைரங்களையும் புதிதாக கண்டு பிடித்துக் கொண்டிருக்கிறேன்.

Well done Rahman sir!

A.R. ரகுமான் அவர்களின் 44 - வது பிறந்த நாள் ( 06. 01. 2009 ) அன்று அவருடைய இல்லத்தில் அடியேனால் எடுக்கப் பட்ட படங்கள்.

அன்பு நெஞ்சங்கள் அளித்த கேக் ஒன்றை ரகுமான் அவர்கள் புன்னகையோடு வெட்டுகிறார்.(மேலே உள்ள படம்)

கொஞ்சம் கூட பந்தா இல்லாமல் எல்லோருடனும் அவர் பழகிய விதமும், பேசிய விதமும் என்னை வியப்படைய செய்தது.

திரு ரகுமானோடு அவர் பிறந்த நாளன்று இருந்த அந்த பதினைந்து நிமிடங்கள் என் வாழ்க்கையின் உன்னதமான நிமிடங்கள்.

கோல்டன் க்ளோப் விருது வாகைச் சூடி தாயகம் திரும்பிய போது A.R. ரகுமான் அவர்களுடைய இல்லத்தில் 14.01.2009 அன்று இரவு 1.30 மணிக்கு அடியேனால் எடுக்கப்பட்ட படங்களில் சில:ஏராளமான ரசிகர் கூட்டத்தோடு நானும் ஒருவனாய் நள்ளிரவு வரை காத்திருந்து
அவருக்கு வாழ்த்து தெரிவித்த தருணத்தை என்னால் என்றென்றும் மறக்க முடியாது.

Newer Posts Older Posts Home